போலீஸார் மீது டிராக்டரை ஏற்றிக்கொல்ல முயன்றதாக ஓட்டுநர் கைது
By DIN | Published On : 02nd September 2019 05:57 AM | Last Updated : 02nd September 2019 05:57 AM | அ+அ அ- |

அன்னவாசல் அருகே வாகனத் தணிக்கையின் போது போலீஸார் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக வாகன ஓட்டுநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அன்னவாசல் காவல் உதவி ஆய்வாளர் ஜெய ஸ்ரீ, சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன், பாபு உள்ளிட்ட காவலர் என மொத்தம் 4 பேர் அன்னவாசல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த விளாப்பட்டியைச் சேர்ந்த மூர்த்திக்குச் சொந்தமான டிராக்டரை போலீஸார் மறித்துள்ளனர். ஆனால், டிராக்டரை நிறுத்தாமல் ஓட்டுநர் விளாப்பட்டியைச் சேர்ந்த கணேசன்(25), போலீஸார் மீது டிராக்டரை ஏற்றிக்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இது குறித்து மூர்த்தி மற்றும் கணேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் கணேசனைக் கைது செய்தனர்.