தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு நிலை விரைவில் மாறும்

தமிழகத்தில் எதிர்க்கும் நிலையில் உள்ள பாஜக, விரைவில் அனைவராலும் ஏற்கும் நிலைக்கு முன்னேறும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்க்கும் நிலையில் உள்ள பாஜக, விரைவில் அனைவராலும் ஏற்கும் நிலைக்கு முன்னேறும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் , ஆலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்ததாக அந்த இடத்துக்கு யார் வருவார் என்று பெரிய விவாதமே நடத்தப்பட்டு வருகிறது. 
இதேநிலை ஒரு முறை கேரளத்திலும் ஏற்பட்டது. அங்கும் மாநிலத் தலைவர் பதவிக்கு பலரது பெயர் அடிபட்டது. தொடர் விவாதமும் நடத்தப்பட்டது. ஆனால், வேறு ஒருவருக்குதான் அந்தப் பதவி கிடைத்து. எனவே, கட்சியின் தலைமை தமிழக தலைவரை விரைவில் நியமிக்கும்.வளர்ச்சியின் காரணமாகத்தான் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பாஜக அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது எதிர்க்கும் நிலையில் உள்ள பாஜக, விரைவில் அனைவராலும் ஏற்கும் நிலைக்கு முன்னேறுவது உறுதி.  நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்தான் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாரே தவிர, மத்திய அரசுக்கோ, உள்துறை அமைச்சருக்கோ இதில் எந்தவித தொடர்பும் இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com