ஸ்டாலினை கைது செய்யும் ஆசை நிறைவேறாது

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை போன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை போன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்ற பாஜக தலைவர்களின் ஆசை நிறைவேறாது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவிமயமாவதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற கேள்வி கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வினா எழுப்பும்படியான பாடத்திட்டத்தை நீக்கவேண்டும். தெலங்கானா ஆளுநராக பதவி ஏற்றிருக்கும் தமிழிசைக்கு  வாழ்த்துகள். தமிழிசை அரசியலில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. ராம்ஜேத்மலானியின் மறைவு அரசியலுக்கும், சட்டத்துறைக்கும் பெரிய இழப்பாகும். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்து தொழில் துறையில் எவ்வாறு முதலீடு பெற்றுள்ளார் என்று அறிக்கை வெளியிட்டால்தான், அதைப்பொறுத்து அவரது பயணம் குறித்து கருத்து தெரிவிக்கலாம். இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது பெரிய சாதனைதான். சந்திரயான்-2 பின்னடைவு குறித்து விஞ்ஞானிகள் கவலை கொள்ளவேண்டாம். தொடர் முயற்சியாற்றவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com