உரிமம் இன்றிச் செயல்பட்ட  3 குடிநீர் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனியார் குடிநீர் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில், உரிய உரிமம் இன்றிச் செயல்பட்ட 3 நிறுவனங்கள் மீது உற்பத்தி நிறுத்த

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனியார் குடிநீர் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வில், உரிய உரிமம் இன்றிச் செயல்பட்ட 3 நிறுவனங்கள் மீது உற்பத்தி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர், மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் பிஐஎஸ் சான்றிதழ் மற்றும் உணவு  உரிமம் இல்லாத  விராலிமலை ஒன்றியம், தேவளி குமாரமங்கலம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  3 குடிநீர் நிறுவனங்களும் மூடப்பட்டு, தற்காலிக உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் அவற்றுக்கு பிரிவு 55-இன் கீழ் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 
பொதுமக்கள் குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி , பிஐஎஸ் எண், உணவுப் பாதுகாப்பு உரிம எண் இல்லாத குடிநீரை வாங்கி அருந்த  வேண்டாம் என்றும், உணவு மற்றும் குடிநீர் சம்பந்தபட்ட புகார்களுக்கு 9944959595 அல்லது 9444042322 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com