சுடச்சுட

  

  ஆலங்குடி,அறந்தாங்கி,விராலிமலை கோயில்களில் கும்பாபிஷேகம்

  By DIN  |   Published on : 12th September 2019 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, அறந் தாங்கி, விராலிமலை கோயில்களில் புதன்கிழமை  கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
  ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை மேலப்பட்டியில் உள்ள பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த திருப்பணி நிறைவடைந்ததையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றன. 
  தொடர்ந்து, புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலில் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸார் மேற்கொண்டனர்.
  விராலிமலை: விராலிமலை வட்டம், பேராம்பூர்   முத்துமாரியம்மன்,  பிடாரியம்மன் மற்றும்  விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா புதன் கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை  காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை  கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. 
  தொடர்ந்து மாலை  6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும் இரவு தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை காலை இரண்டாம் யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை குருக்கள் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள்  தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோயிலை சுற்றிவந்து  மேல் கோபுரங்களுக்கு எடுத்துச்சென்றனர். 
  பின்னர் வேதமந்திரம் முழங்க விநாயகர், முத்துமாரியம்மன், பிடாரியம்மன் ஆகிய கோயில் கோபுரக் கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
  பூவலூரில் அகதீசுவரர் கோயில் குடமுழுக்கு: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பூவலூரில் உள்ள ஸ்ரீ புவனேசுவரி சமேத அகதீசுவரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
   இதையடுத்து,  கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் தொடங்கி விழா கமிட்டி தலைவர் வழக்குரைஞர் சி. ராமநாதன் தலைமையில் மதுரை இளைய மடாதிபதி 
  ஸ்ரீ திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிகள் முன்னிலையில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  முன்னதாக திங்கள் கிழமை காலை கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜையும், செவ்வாய்க் கிழமை இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜையும், புதன்கிழமை காலை நான்காம் கால பூஜையும் நடைபெற்று கடங்கள் புறப்பட்டு பின்னர் பல்வேறு புன்னியநதிகளில் இருந்து கொண்டு வந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது. 
  கும்பாபிஷேகத்தை பூவலூர் சித.தங்கம் குருக்கள் சகோதரர்கள் மற்றும் ஆவுடையார்கோயில் பப்பு ஆகியோர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai