சுடச்சுட

  

  கால்பந்து போட்டியில் சிங்கம்புணரி அணியினர் முதலிடம்

  By DIN  |   Published on : 12th September 2019 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொன்னமராவதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அணியினர் முதலிடம் பெற்றுள்ளனர்.
  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில்  கால்பந்து திருவிழா - 2019 புதன்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி கால்பந்து திருவிழா குழுமம் சார்பில் காலையில் நடைபெற்ற போட்டியை மருத்துவர் மு.சின்னப்பா தொடங்கி வைத்தார். போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 8 அணியினர் பங்கேற்று விளையாடினர். போட்டியில், சிங்கம்புணரி கால்பந்து அணியினர் முதலிடமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியினர் இரண்டாமிடமும், காரைக்குடி அழகப்பா கல்லூரி அணியினர் மூன்றாமிடமும், பொன்னமராவதி அணியினர் நான்காம் இடமும் பெற்றனர். 
  போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கும் விழா மாலை நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர்கள் எஸ்.முத்து, வலம்புரி வடுகநாதன் பள்ளி செயலர் வி.இ.ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். கணேசர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பொன்.கதிரேசன் வரவேற்றார்.  விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்கத் தலைவர் மற்றும் பேராசிரியர் அ.பழனிச்சாமி பங்கேற்று வெற்றிபெற்ற அணியினருக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். முன்னாள் உடற்கல்வி இயக்குனர் நா.விஜயரகுநாதன், மாநில கால்பந்து வீரர் ஜெகன், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜாசந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போட்டி  ஏற்பாடுகளை  கால்பந்து  குழும நிர்வாகிகள் தலைமையாசிரியர் சுப.செல்வமணி, ச.வில்லியம், ஆர்.பாலுச்சாமி, தி.ராஜ்குமார், கா.பிரபு, சூரியா கணேசன், ச.அழகுராஜா, சையது அபுதாஹிர், தமிழ்மாறன், எஸ்டி.காமராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வை, ஆன்மிக சொற்பொழிவாளர் பிஆர்.சிந்து ஒருங்கிணைத்தார். கால்பந்து போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் கோ.ஜெபனேசர் ஞானையா  நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai