சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டத்தில், குறுவட்ட அளவில் நடைபெற்ற குழு, தடகள விளையாட்டுப் போட்டிகளில் கந்தர்வகோட்டை வித்யாவிகாஸ் பள்ளி சாம்பியன் பட்டத்தை பெற்றது.
  அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், வளைகோல் பந்து, கூடைப்பந்து ,  கைப்பந்து,  எறிபந்து ,  பீச் வாலிபால் , டென்னிஸ் ,  இறகுப்பந்து ,  கோ-கோ , கபடி, சதுரங்கம் ஆகிய குழுப் போட்டிகளிலும்,  19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ,  110 மீட்டர்  தடைதாண்டுதல் , குண்டு எறிதல் , ஈட்டி எறிதல் , 400, 800 மீட்டர் ஓட்டம் ,  400 மீட்டர் தொடர்  ஓட்டம்  ஆகிய போட்டிகளில் வித்யாவிகாஸ் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
   17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 400 மீட்டர்,  200 மீட்டர் ஓட்டம்,  100 மீட்டர் தடைதாண்டுதல்,  குண்டு எறிதல் ,  800 மீட்டர் , 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகளப் போட்டிகளில் முதலிடமும் , எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இப்பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர்.
  சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் செயல்அறங்காவலர்கள் பாஸ்கர் மற்றும் மருத்துவர் கார்த்திகேயன்  பாராட்டினர்.  மெட்ரிக். பள்ளி முதல்வர் வெண்ணிலா , நிர்வாக அலுவலர் சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai