சுடச்சுட

  

  பொன்னமராவதியை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 12th September 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொன்னமராவதியை தனி கல்வி மாவட்டமாக அறிவித்திடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியப் பொறுப்பாளர் ஆர். பிரதாப் சிங் தலைமை வகித்தார். விபி. நாகலிங்கம்,  மாவட்ட துணை செயலர் கேஆர்.தர்மராஜன், மாவட்டப் பொருளாளர் பி. திருநாவுக்கரசு ஆகியோர்  முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை, மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ஏஎல்.ராசு தொடங்கி வைத்தார்.  மாவட்டச் செயலர் மு. மாதவன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பொன்னமராவதியில் நீதிமன்றம் மற்றும் கிளை சிறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  ஒன்றிய துணை செயலர் வி.வெள்ளைக்கண்ணு நன்றி கூறினார்.
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் : கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
  கந்தர்வகோட்டை பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற  பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. ரெத்தினவேல் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பி . வீராச்சாமி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ. 1 லட்சத்து 50  ஆயிரத்தைப் பெற்றுக்கொண்ட கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ . சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார் . கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சின்னத்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ. ராமையன், எஸ். சங்கர், க. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சித்திரைவேல் , பன்னீர்செல்வம், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், இளையராஜா நன்றியுரையாற்றினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai