சுடச்சுட

  

  மருத்துவர்கள்,  செவிலியர்களுக்கு மன அழுத்த  மேலாண்மைப் பயிற்சி

  By DIN  |   Published on : 12th September 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான மன அழுத்த மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசியது:
  மருத்துவர்களும், செவிலியர்களும் மன அழுத்த மேலாண்மைப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டால்தான், நோயாளிகளுக்கு தரமான சேவையை அளிக்க முடியும் என்றார். தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில் மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்ப்பது, கட்டுப்படுத்துவது, சிகிச்சை அளித்தல் ஆகிய முன்று பிரிவுகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai