ஆவூர் ஊர்ப்புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி

விராலிமலை ஒன்றியம், ஆவூரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்கு ஆயுள்கால உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி புதன்கிழமை  நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியம், ஆவூரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்கு ஆயுள்கால உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி புதன்கிழமை  நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ்  கடந்த 2017 ஜனவரி முதல் ஊர்ப்புற நூலகம் ஆவூரில் செயல்பட்டு வருகிறது.  இந்த நூலகத்தில் தற்போது 2 ஆயிரம் நூல்கள் உள்ளது. 
மேலும் 130  ஆங்கிலம்,  தமிழ் பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள்  மாணவர்களுக்குத் தேவையான  குறிப்புதவி மற்றும்  போட்டித்தேர்வு,  இலக்கியம், கவிதை, வரலாறு, மருத்துவம், அறிவியல், சட்டம் சார்ந்த நூல்கள் உள்ளது. இந்நிலையில், தற்போது  பள்ளி மாணவர்கள் அனைவரும் நூலகத்தினை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவும்  அவர்களது வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆவூர் ஊர்ப்புற 
நூலகத்தில் ஆயுள்கால உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
உதவி தலைமை ஆசிரியர் சலீம் தலைமை வகித்தார். ஆசிரியர் வின்சென்ட் வரவேற்றார். 
இதில் மாணவ மாணவிகள் ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 660 பேருக்கான ஆயுள்கால  உறுப்பினர் தொகையை இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் சார்பில் அதன் நிர்வாக அலுவலர் நாகப்பன், மெய்யம்மை வழங்கிப் பேசினர். நூலகர் நாகலெட்சுமி நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com