சுடச்சுட

  

  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், போஷான் அபியான் குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
  தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி  சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணி, புது வளைவில் தொடங்கியது.
  அண்ணாசாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்த பேரணி அண்ணாநகர் அங்கன்வாடி மையத்தில் நிறைவு பெற்றது.  
  ஊட்டசத்து குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் 
  அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர்.
  குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் தமிழ்ச்செல்வி, விக்டோரியா, சரோஜாதேவி, பூங்கோதை, போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தலைவர் சந்திரா, துணைத்தலைவி முத்துலெட்சுமி மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்  பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai