சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷடவசமாக மாணவ, மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
  பொன்னமராவதி வலையபட்டி-மணப்பட்டி சாலையில்  இயங்கி வரும் தனியார் பள்ளியின் மாற்று வேன், பிடாரம்பட்டியில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது.
   அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட ஒதுங்கிய போது, சாலையோரத்தில் இருந்த வயல்வெளியில் வேன் கவிழ்ந்தது. தொடர் மழையின் காரணமாக அப்பகுதி ஈரப்பதத்துடன் காணப்பட்டதால் விபத்து நிகழ்ந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து குழந்தைகளை மீட்டுள்ளனர். இதில் குழந்தைகள் சிறுகாயமின்றி தப்பியுள்ளனர். 
  இதையறிந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு 
  அழைத்துச் சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai