சுடச்சுட

  

  மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

  By DIN  |   Published on : 13th September 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கந்தர்வகோட்டை அருகே நகை அடகுக்கடை உரிமையாளரின்  மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து, ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
  கந்தர்வகோட்டை அருகிலுள்ள மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (46). வேலாடிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வரும்  இவர், புதன்கிழமை கந்தர்வகோட்டை வங்கியிருந்து ரூ.1.5 லட்சம் ரொக்கம், 12 கிராம் தங்கத்தை எடுத்து, தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு கடைக்கு வந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்று சிறிது நேரம் கழித்து வந்த போது, மோட்டார் சைக்கிளில் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பெட்டியிலிருந்த ரொக்கம், நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
  இதையடுத்து கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை சரிபார்த்த போது,  இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதும், ஒருவர் பெட்டியை உடைத்து திருடியதும், மற்றொருவர் காத்திருந்ததும் தெரிய வந்தது.
  இதைத் தொடர்ந்து  விடியோ ஆதாரங்களுடன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai