சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பல்வேறு இடங்களில் போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையில், 1, 553 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  புதுக்கோட்டை நகரில் கடந்த இரு நாள்களாக  அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், மாலையீடு, அரசு மகளிர் கலைக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், பேராங்குளம் முக்கம், டிவிஎஸ் கார்னர், பால் பண்ணை ரவுண்டானா, பிஎல்ஏ ரவுண்டானா, பிருந்தாவனம் முக்கம் ஆகிய 10 இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
  மேலும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர், அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், இலுப்பூர் ஆகிய உள்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த வாகனத் தணிக்கை நடைபெற்றது.
  இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்லுதல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுதல் உள்பட 624 வழக்குகளை வியாழக்கிழமை போலீஸார் பதிவு செய்து உள்ளனர். 
  புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
  எனவே, கடந்த இரு நாள்களில் 1,553 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai