சுடச்சுட

  

  புதுக்கோட்டையில் செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்களுக்கான விபத்து மற்றும்  அவசர சிகிச்சைக்கான முதலுதவிப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
  இந்திய மயக்கவியல் மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய பயிற்சித் தொடக்க விழாவுக்கு, இந்திய மருத்துவச் சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் சலீம் முன்னிலை வகித்தார். மயக்கவியல் மருத்துவர் சங்கச் செயலர் மு. பெரியசாமி உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.
   விபத்தில் சிக்கியோருக்கு இருதயத்தை இயங்க வைக்கும் முறை, செயற்கை சுவாசம் வழங்கும் முறை, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக எடுத்து செல்லும் முறைகள் குறித்த பயிற்சியும், சாலை விபத்து, தீக்காயம், விஷக்கடி, மின்சார விபத்து ஆகியவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 
  இதில் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பலர்
   கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai