Enable Javscript for better performance
ஆவுடையார்கோவிலில் 33.20 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    ஆவுடையார்கோவிலில் 33.20 மி.மீ. மழை

    By DIN  |   Published on : 14th September 2019 09:37 AM  |   அ+அ அ-   |    |  

    புதுக்கோட்டை மாவட்டம்,  ஆவுடையார்கோவிலில் 33.20 மி.மீ.
    மழைப் பதிவாகியுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மற்றும் இரவு பரவலாக மழை பெய்தது. ஏற்கெனவே புதன்கிழமையும் மாலை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், வெப்பம் தணிந்து காணப்பட்டது.  வெள்ளிக்கிழமை காலை  8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
    ஆவுடையார்கோவில்- 33.20 மி.மீ, ஆதனக்கோட்டை- 21,  அரிமளம்- 17.60, கந்தர்வகோட்டை- 17,  கீழாநிலை- 15.20,   மணமேல்குடி- 14.20,  திருமயம்- 12.40,    கீரனூர்- 11.80,  பெருங்களூர்- 11.20,  கட்டுமாவடி- 10.30,  விராலிமலை- 9.20,   உடையாளிப்பட்டி, இலுப்பூர்-  8,  ஆலங்குடி- 7.60, மீமிசல்- 6.80, மழையூர்- 6.20, நாகுடி- 5.80,  புதுக்கோட்டை - 5.40, அன்னவாசல்- 5,   கறம்பக்குடி- 4.20,  குடுமியான்மலை- 3,  பொன்னமராவதி- 1 மி.மீ.  புதுக்கோட்டை மாவட்டத்தின் சராசரி மழையளவு 9.36 மி.மீ.
     

    kattana sevai