Enable Javscript for better performance
நல்லி-திசை எட்டும் நடத்திய மொழியாக்கப் போட்டி முடிவுகள்- Dinamani

சுடச்சுட

    

    நல்லி-திசை எட்டும் நடத்திய மொழியாக்கப் போட்டி முடிவுகள்

    By DIN  |   Published on : 14th September 2019 09:37 AM  |   அ+அ அ-   |    |  

    புதுக்கோட்டையில் நல்லி சில்க்ஸ்- திசை எட்டும் இணைந்து  நட த்திய மொழியாக்கப் போட்டிகளில் வென்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    நல்லி சில்க்ஸ் நிறுவனமும் திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டிதழும் இணைந்து, ஆகஸ்ட்  23-ஆம் தேதி புதுக்கோட்டையில் மொழியாக்கப் போட்டிகளை நடத்தின.  இப்போட்டியின் முடிவுகளை விழா ஒருங்கிணைப்பாளர்கள் நா.முத்துநிலவன், தங்கம் மூர்த்தி, சா.விஸ்வநாதன், காசாவயல் கண்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
    போட்டியின் பெயர், முறையே முதல் 3 இடங்களைப் பெற்றோர் என்ற அடிப்படையில் விவரம் :
    தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தல்- பள்ளி மாணவர்கள் பிரிவு: மெளண்ட் சீயோன் சிபிஎஸ்சி பள்ளி மாணவி த. அனிஷா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர் வெ. சங்கரநாராயணன்,  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜா.சபனா பானு.
    கல்லூரி மாணவர்கள் பிரிவு: நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி மாணவி க.செல்விஷோபாஸ்ரீ , ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் க.சனோபர் பாத்திமா, அ.வைரபாரதி.  
    ஆங்கிலத்திலிருந்து  தமிழில் மொழியாக்கம் செய்தல் - பள்ளி மாணவர்கள் பிரிவு : ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி மாணவர் ந.பரத்குமார், சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி க.பவித்ரா , நச்சாந்துப்பட்டி அன்னை மெட்ரிக். பள்ளி மாணவி மு.சுமிதா. 
    கல்லூரி மாணவர்கள் பிரிவு :   நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி மாணவி சே. பரணிகா, அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி அ. நெளபியா ஆப்ரின், நைனா முகமது கலைஅறிவியல் கல்லூரி மாணவி ஜெ. தீபிகா.
    தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழியாக்கம் செய்தல்- பொதுப் பிரிவு :  பட்டதாரி ஆசிரியை ஆ.மணிமொழி, ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ம.லெட்சுமணன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி ஆசிரியை சு.பவானி.
    ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தல் - பொதுப்பிரிவு:  முதுகலைப் பட்டதாரி ஆசிரியை மீ.சியாமளி ,  ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ம.லெட்சுமணன், பட்டதாரி ஆசிரியர் ஆர்.ராஜநாராயணன்.
    இவர்கள் அனைவருக்கும்  செப்டம்பர்  30 - ஆம் தேதி தி கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விழாவில்,  நல்லி குப்புசாமி செட்டியார், திசை எட்டும் இதழாசிரியர் குறிஞ்சிவேலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் விழாவில் ரொக்கப் பரிசும், விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    kattana sevai