Enable Javscript for better performance
சாந்தநாத சுவாமி கோயில் வளாகம், பூ மார்க்கெட்டுக்குள் புகுந்த மழை நீர்- Dinamani

சுடச்சுட

    

    சாந்தநாத சுவாமி கோயில் வளாகம், பூ மார்க்கெட்டுக்குள் புகுந்த மழை நீர்

    By DIN  |   Published on : 25th September 2019 11:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை இரவில் பெய்த மழை காரணமாக சாந்தநாத சுவாமி கோயில் மற்றும் பூ மார்க்கெட் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. தகவலறிந்த நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை மழைநீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
    புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாந்தநாதசுவாமி கோயிலுக்குள்ளும், பூ மார்க்கெட் பகுதியிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதையடுத்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன் பணியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் பூ மார்க்கெட் பகுதியில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. 
    சாந்தநாத சுவாமி கோயிலில் தேங்கிய தண்ணீர் மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் வடிந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai