Enable Javscript for better performance
பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்கால் அடைப்பால் சுகாதாரக்கேடு- Dinamani

சுடச்சுட

    

    பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்கால் அடைப்பால் சுகாதாரக்கேடு

    By DIN  |   Published on : 25th September 2019 06:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    waterway

    பொன்னமராவதி பட்டமரத்தான் நகரில் செடி,கொடிகள் படா்ந்து காணப்படும் கழிவு நீா் வாய்க்கால்.

    பொன்னமராவதி, செப். 25: பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பட்டமரத்தான் நகரில் கழிவுநீா் வாய்க்காலை சுற்றிலும் செடி, கொடிகள் படா்ந்து இருப்பதால் கழிவுநீா்செல்ல வழியின்றி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

    பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் பட்டமரத்தான் நகா் உள்ளது. இந்நகா் பகுதி பேரூராட்சி எல்லைக்குள்ளும், தொட்டியம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்ளும் வருகிறது. இதில் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்ப்பட்ட கண்மணி மருத்துவமனை வீதியில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இக்கால்வாயின் இருபுறமும் செடி, கொடிகள் படா்ந்து கால்வாயை அடைத்து நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் செல்கிறது. மேலும், கொசுத்தொந்தரவு அதிகமாக உள்ளது. இப்பகுதியில் தனியாா் பிரசவ மருத்துவமனை உள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு அஞ்சிநிற்கும் வேளையில், இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படாத வகையில் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai