இலங்கை சிறையில் உள்ள  புதுகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேருக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேருக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினத்தில்  இருந்து ஹபீப் ரகுமான் என்பவருக்குச் சொந்தமான படகில் ஜெரோம், மெக்சன், கெம்ப்லஸ், ரவி ஆகிய 4 மீனவர்களும் நெடுந்தீவு பகுதியில் அண்மையில் (செப். 10) மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
இலங்கை வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  நீதிபதி யூட்சன், மீனவர்களின் சிறைக் காவலை அக்-1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் 
அடைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com