கந்தர்வகோட்டை விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கல்

கந்தர்வகோட்டை பகுதிகளில்  விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை வேளாண்மை துறை சார்பில் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டது.  

கந்தர்வகோட்டை பகுதிகளில்  விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை வேளாண்மை துறை சார்பில் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டது.  
கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் பாசன ஏரியின் கரைகளில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கந்தர்வக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் மு . சங்கரலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் சொக்கம்பேட்டை , ஆத்தங்கரைவிடுதி, வெள்ளாளவிடுதி, மட்டங்கால், காட்டுநாவல், கல்லாக்கோட்டை மற்றும் 
மஞ்சப்பேட்டை, தெத்துவாசல்பட்டி,  பழையகந்தர்வகோட்டை, வடுகப்பட்டி, புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்வதை முன்னிட்டு பிசானத்தூர் பாசன ஏரியின் கரைகளில் பனை விதைகளை கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நார்த்தாமலை பா .  ஆறுமுகம் நடவு செய்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்று, பனைவிதைகளை வழங்கினார். 
நிகழ்ச்சியில்,  ஒன்றியக் கழக செயலாளர் ஆர். ரெங்கராஜன்,  வேளாண்மை உதவி அலுவலர் வைசாலி , ஒன்றியப் பொருளாளர் எம் . மாரிமுத்து , எம்.  தமிழழகன்,  மற்றும் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில், 10,000 பயன் தரும் மரக்கன்றுகளும், 5,000 பழ மரக்கன்றுகளும் பனை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com