காரையூரில் 1.41 செ.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக காரையூரில் 1.41 செமீ மழை பதிவாகியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக காரையூரில் 1.41 செமீ மழை பதிவாகியுள்ளது. 
அதேபோல, கீரனூரில் 1.10 செமீயும் மழை பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழைப் பொழிவில் இவ்விரண்டு அளவுகளும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீயில்)
ஆதனக்கோட்டை- 10, பெருங்களூர் - 58, புதுக்கோட்டை- 44, ஆலங்குடி- 32.80, கந்தர்வக்கோட்டை- 55, கறம்பக்குடி- 47.60, மழையூர் - 49.60, கீழாநிலை - 20, திருமயம் - 78, அரிமளம் - 46, ஆயிங்குடி- 5.20, இலுப்பூர் - 20, குடுமியான்மலை - 68, அன்னவாசல் - 60, விராலிமலை - 10.20, உடையாளிப்பட்டி- 33.50, பொன்னமராவதி - 20.30.
இவை தவிர, கீரனூரில் 110.80 மிமீயும் (அதாவது 1.10 செமீ), காரையூரில் 141 மி.மீயும் (அதாவது 1.41 செமீ) பதிவாகியுள்ளன. இவ்விரு அளவுகளுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவ்வப்போது பெய்து வரும் மழைத் தொடரில் பதிவாகாத அதிகபட்ச மழைப் பொழிவாகும். மாவட்டத்தின் சராசரி மழை- 36.40 மி.மீ.
கந்தர்வகோட்டையில் கரை பெயர்ந்து வீணான மழைநீர்:
கந்தர்வகோட்டை பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தாழைவாரி நீர்நிலையின் கரை பெயர்ந்து மழை நீர் வீணானது.  
கந்தர்வகோட்டை பகுதிகளில் மழைக்காலம் தொடங்கும் முன்பு நீர்நிலைகளைத் தூர்வாரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இருப்பினும், இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தாழைவாரி நீர்நிலையின் கரை பெயர்ந்து விவசாய நிலங்கள், வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. 
மேலும், கந்தர்வகோட்டை கடைவீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மழைநீர் புகுந்தது. நீர்நிலைகள் சீரமைக்கப்படாததால், பெருமளவிலான மழைநீர் வீணானதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com