கோ-ஆப்-டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.25 கோடி: ஆட்சியர்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கோ- ஆப்- டெக்ஸின் முக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டுக்கான தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.25 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கோ- ஆப்- டெக்ஸின் முக்கனி விற்பனை நிலையத்தில் நிகழாண்டுக்கான தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.25 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
தீபாவளி சிறப்பு விற்பனையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அவர் மேலும் கூறியது: 
கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ. 90.19 லட்சம் விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே, நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ. 1.25 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த முக்கனி விற்பனை நிலையத்தில், கோவை மென்பட்டு, காஞ்சி, ஆரணி, தஞ்சை, திருபுவனம்  பட்டுப் புடவைகளும், கோவை கோரா காட்டன் புடவைகளும், கூரைநாடு புடவைகளும் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
மேலும், வேட்டிகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஆயத்த ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான துணிகளுக்கும் அரசின் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
மேலும், கனவு நனவுக் திட்டத்தில் 11 மாதம் தொடர்ந்து சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 12ஆவது தவணையை கோ-ஆப்-டெக்ஸ் செலுத்தி, மேலும் அப்போது எடுக்கும் அனைத்து துணிகளுக்கும் 30 சதவிகிதத் தள்ளுபடியும் வழங்குகிறது. 
பொதுமக்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இந்தத் 
தீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்-டெக்ஸில் துணிகளை வாங்கி நெசவாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் உமா மகேஸ்வரி.
நிகழ்ச்சியில், கோ-ஆப்-டெக்ஸ் மண்டல மேலாளர் சு. மாணிக்கம், கோட்டாட்சியர் எம்எஸ். தண்டாயுதபாணி, கோ-ஆப்-டெக்ஸ் மேலாளர்கள் இரா. சீனிவாசன், சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com