Enable Javscript for better performance
கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி

    By DIN  |   Published on : 29th September 2019 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசுப் புழு ஒழிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சனிக் கிழமை நடைபெற்றது. 
    தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில் சனிக்கிழமை டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றன. கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் சாலையோரங்களிலும், தெருக்களிலும் வீட்டிலுள்ள பயன்படுத்தாத , பழைய பொருட்கள், டயர், சிரட்டை உள்ளிட்டவைகளில் நீர் தேங்காமல்  சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தண்ணீர் உள்ள பாத்திரங்களை மூடிவைக்கவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து சுகாதாரப்  பணியாளர்கள் வீதி மற்றும் வீடுகள்தோறும் கொசு மருந்து அடித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai