Enable Javscript for better performance
தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் கறவை மாடு கடன் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் கறவை மாடு கடன் வழங்கல்

    By DIN  |   Published on : 29th September 2019 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் கறவை மாடு மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தச்சங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழாவிற்கு கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை பா. ஆறுமுகம் தலைமை வகித்தார். அனைவரையும் வங்கிச் செயலாளர் ஆபேல் வரவேற்றார். பயனாளிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் சுயஉதவிக் குழுவினருக்கான கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ரா. சின்னதம்பி வழங்கினார். 
    விழாவில், 114 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு கடனாக ரூ. 46 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 20 சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2 லட்சம் கடனும் வழங்கப்பட்டது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai