இயந்திர நெல் நடவு நேரடி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் அடைந்திட இயந்திர நடவு முறையில் நெல் நடவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.சுப்பையா கேட்டுக்கொண்டுள்ளார். 


புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் அடைந்திட இயந்திர நடவு முறையில் நெல் நடவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு.சுப்பையா கேட்டுக்கொண்டுள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் வட்டாரத்தில் சனிக்கிழமை இயந்திர நெல் நடவுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு இயந்திர நடவின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் பேசியது:  
நெல் இயந்திர நடவுத் தொழில்நுட்பத்தில் இளவயது (14-18 நாட்கள்) நாற்றுகளை நடவு செய்வதால் அதிக அளவு தூர்கள் கிடைக்கின்றன. இயந்திர நடவில் நாற்றுகளுக்கிடையே சீரான இடைவெளியும், ஒரு சதுர அடிக்குள் இருக்க வேண்டிய பயிர் எண்ணிக்கையும் உறுதிப்படுத்தப்படுகின்றன. 
இயந்திர நெல் நடவில் வழக்கமான நடவு முறையினை விடக் குறைந்த ஆட்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவு நடவு செய்யலாம். ஒரே நாளில் 5 ஏக்கர் வரை நடவு செய்ய முடியும். 
இயந்திர நடவில் நெல் உற்பத்தி, உற்பத்தித் திறனும் அதிகரித்து விவசாயிகளுக்கு நிகர வருமானம் உயர்ந்திட ஏதுவாகிறது. 
பாய் நாற்றங்கால் அமைத்து இயந்திர நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியின்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அ. கோமதிதங்கம், குன்றாண்டார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் அ. இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் மா. மாதேஷ், துணை வேளாண்மை அலுவலர் மு.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com