கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி

கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசுப் புழு ஒழிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சனிக் கிழமை நடைபெற்றது. 


கந்தர்வகோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசுப் புழு ஒழிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் சனிக் கிழமை நடைபெற்றது. 
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில் சனிக்கிழமை டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றன. கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் சாலையோரங்களிலும், தெருக்களிலும் வீட்டிலுள்ள பயன்படுத்தாத , பழைய பொருட்கள், டயர், சிரட்டை உள்ளிட்டவைகளில் நீர் தேங்காமல்  சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தண்ணீர் உள்ள பாத்திரங்களை மூடிவைக்கவும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து சுகாதாரப்  பணியாளர்கள் வீதி மற்றும் வீடுகள்தோறும் கொசு மருந்து அடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com