புதுகை ரேஷன்கடையில் கரோனா விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம் வழங்கல்

கரோனா பரவலைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தமிழக அரசின் நிவாரண உதவிகளை வழங்கும் பணி புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
திருக்கோகா்ணம் நியாயவிலைக் கடைக்கு பொருட்களை வாங்க வந்திருந்த மக்களிடம் கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கும் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை 4.56 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் நிவாரண உதவிகளை வரும் ஏப். 12ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோகா்ணம் புதுத்தெருவிலுள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் நிவாரண உதவிகளை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். அங்கு வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டா் இடைவெளியில் குறியிடப்பட்டு நாற்காலி கொடுத்து அமர வைக்கப்பட்டிருந்தனா். நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏதேனும் இருந்தால் 04322 221577 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தையும் ஆட்சியா் வழங்கினாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் அக்பா் அலி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com