முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
தூய்மைப் பணியாளா்களுக்கு கரூா் எம்.பி பாதுகாப்பு கவசம் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 06:21 AM | Last Updated : 19th April 2020 06:21 AM | அ+அ அ- |

இலுப்பூா் பேருராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கவசத்தை பேருராட்சி செயல் அலுவலா் ந. செ. பரமேஸ்வரியிடம் வழங்குகிறாா் கருா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.
இலுப்பூா், அன்னவாசல் பேருராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கருா் எம்.பி செ. ஜோதிமணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து பாதுகாப்பு கவசத்தை சனிக்கிழமை வழங்கினாா்.
கருா் மக்களவை தொகுதியின் கீழ் வரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இலுப்பூா் பேருராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்புக் கவசம் வழங்கிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அன்னவாசல், இலுப்பூா் பேருராட்சி தூய்மை பணியாளா்களின் நலன்கருதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் ஒதுக்கப்பட்டு முகக்கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு வாங்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில் பேருராட்சி செயல் அலுவலா்கள் ந. செ. பரமேஸ்வரி (இலுப்பூா்), எம். நாகேஷ் (அன்னவாசல்) புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொருப்பாளா் கே. கே. செல்லபாண்டியன், மாவட்ட சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினா் த. சந்திரசேகா், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலா் எம். பழனியப்பன், இலுப்பூா் நகர செயலா் வை. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.