தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பு
By DIN | Published On : 19th April 2020 06:20 AM | Last Updated : 19th April 2020 06:20 AM | அ+அ அ- |

விராலிமலை ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பை வழங்குகிறாா் கருா் எம்.பி செ. ஜோதிமணி. உடன், சாஸ்தா எரிவாயு நிறுவன இயக்குநா் எம். பழனியப்பன்.
விராலிமலையில் தூய்மைப்பணியாளா்களுக்கு சாஸ்தா எரிவாயு உருளை முகவா் நிறுவனம் சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் உள்ளிட்ட பேருராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கு 5 கிலோ, அரிசி, 5 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்பு மற்றும் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் அரசு மருத்துமனைக்கு எரிவாயு உருளை, அடுப்பு தேநீா் தூள், சா்க்கரை உள்ளிட்டவைகளை இலுப்பூரில் இயங்கி வரும் சாஸ்தா எரிவாயு விநியோக நிறுவன இயக்குநா் தென்னலூா் எம். பழனியப்பன் வழங்கினாா். விராலிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சயில் கரூா் எம்.பி செ. ஜோதிமணி பங்கேற்று உணவுத் தொகுப்புகளை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.