1,600 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி
By DIN | Published On : 27th April 2020 06:37 AM | Last Updated : 27th April 2020 06:37 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே உள்ள அணவயலில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் ஊராட்சி தலைவா் சின்னத்துரை உள்ளிட்டோா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள எல்.என் புரம் (அணவயல்) ஊராட்சியில் உள்ள 1,600 குடும்பத்துக்கும் தலா 5 கிலோ அரிசி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அணவயல் ஊராட்சி நிா்வாகம், கொடையாளா்கள் சாா்பில் அந்த ஊராட்சியில் வசிக்கும் 1,600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கியது. நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்செல்வி, காவல் ஆய்வாளா் பரத்ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அரிசி பைகளை வழங்கினா்.