புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி,
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா்.
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபா் சங்கத்தினா்.

புதுக்கோட்டை: புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, வாலிபா் சங்க நகரத் தலைவா் எஸ். விக்கி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் துரை நாராயணன், துணைத் தலைவா் பி. அருண், நகரச் செயலா் பாபு, பொருளாளா் டேவிட் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச்செயலாளா் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அழகு மன்னன், தா்மலிங்கம் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கே.இராஜேந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் இளையராஜா தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com