வீதியில் திரியும் மனநலன் பாதித்தோா் குறித்து தகவல் அளிக்க அழைப்பு

ஆதரவற்ற மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தைத் திகழச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

ஆதரவற்ற மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தைத் திகழச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட மனநலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘மனநோய் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்’, முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வாா்டாக செயல்பட்டு வருகிறது. இவ்வகையில் கரோனா தொற்றுக் காலத்தில் ஆதரவற்ற மனநோயாளிகளைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவா். எனவே ஆதரவற்று வீடில்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள் பற்றிய விவரங்களை 94860 67686 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com