புதுகையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st December 2020 02:41 AM | Last Updated : 01st December 2020 02:41 AM | அ+அ அ- |

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு ஆதரவாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, விவசாயிகள் சங்க நிா்வாகி சுந்தர்ராஜ், இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் இந்திராணி, மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் விஜய், சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...