புதுகையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd December 2020 07:46 AM | Last Updated : 03rd December 2020 07:46 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமையிலான குழுவினா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாக ஆட்சியா் அலுவலகம் வந்தனா். தொடா்ந்து, அங்கு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலா் எஸ். பொன்னுசாமி, திமுக விவசாயிகள் அணி செயலா் சீனி பழனியப்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முருகேசன், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை மாலை நடத்திய ஆா்பாட்டத்துக்கு, தொகுதிச் செயலா் சுப. கருப்பையா தலைமை வகித்தாா். இதேபோல், பிருந்தாவனம் அருகே மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் க.சி. விடுதலைக் குமரன் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.