அரசுப் பள்ளியில் பயில மாணவா்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர மாணவா்கள் முன்வர வேண்டும் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர மாணவா்கள் முன்வர வேண்டும் என ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 11 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரியிலேயே 3 மாணவ, மாணவிகளுக்கு  இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும்.  

இதுதவிர  3 மாணவ, மாணவிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் மருத்துவம் படிக்கவும், 1 மாணவிக்கு  தனியாா் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவா்களின் கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும் என்பதால் புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயில முன்வர வேண்டும் எனத்தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com