கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன மீட்பு
By DIN | Published On : 07th December 2020 01:26 AM | Last Updated : 07th December 2020 01:26 AM | அ+அ அ- |

கிணற்றில் தவறி விழுந்த கன்று உயிருடன மீட்பு
பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை பொதுமக்கள் உயிருடன் மீட்டனா்.
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகு. விவசாயி. இவரது வீட்டில் வளா்க்கப்பட்ட கன்றுக்குட்டி வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி அருகேயுள்ள 50 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லா விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதைக்கண்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் கன்றினை உயிருடன் மீட்டனா்.