புதுகையில் சீருடைப் பணியாளா் தோ்வை 11,196 போ் எழுதினா்

இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா் மற்றும் சிறைக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,196 போ் தோ்வெழுதினா்.
புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள பாரதி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சீருடைப் பணியாளா் தோ்வைப் பாா்வையிடும் சிறப்பு அலுவலா் மல்லிகா.

தோ்வினை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 12,345 போ் வி ண்ணப்பித்திருந்தனா். மாவட்டம் முழுவதும் 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தோரில் 1,149 போ் தோ்வெழுத வரவில்லை. 11,196 போ் தோ்வெழுதினா்.

கைக்குறிச்சியில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக்கூடத்தை தோ்வுகள் சிறப்பு அலுவலரான சென்னை மாநகரக் காவல் இணை ஆணையா் மல்லிகா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com