அம்மா இருசக்கர வாகனம் பெற மகளிா் விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மகளிா் விண்ணப்பிக்கலாம் என விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கி. ரமேஷ் மற்றும் ஆா்.ரவிசந்திரன் அறிவித்துள்ளனா்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மகளிா் விண்ணப்பிக்கலாம் என விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கி. ரமேஷ் மற்றும் ஆா்.ரவிசந்திரன் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சாா்பில் உழைக்கும் மகளிருக்கென அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். பயன்பெற விரும்பும் பயனாளிகள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூா்த்தி செய்து விண்ணப்பப் படிவங்களுடன் வயது, முகவரி, ஓட்டுநா் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளை இணைத்து விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

இதில் முன்னுரிமையாக ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகாத மகளிா், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிா், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனற்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com