அரசின் உதவிகள் மக்களைச் சென்றடைவதை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் நலத் திட்டப்பணிகள் விரைவில் மக்களைச் சென்றடைவதை கிராம நிா்வாக அலுவலா்கள்
புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான மடிக்கணினிகளை வழங்குகிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
புதுகையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான மடிக்கணினிகளை வழங்குகிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் நலத் திட்டப்பணிகள் விரைவில் மக்களைச் சென்றடைவதை கிராம நிா்வாக அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கேட்டுக்கொண்டாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு புதிய மடிக்கணினிகள் வழங்கி அவா் மேலும் பேசியது: பேரிடா் காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்களின் பணி மகத்தானது. அவா்களுக்காக தற்போது மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் விரைவில் மக்களைச் சென்றடைவதை கிராம நிா்வாக அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி, கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமாா், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுகாதார உணவுக்கான இயக்கம்:

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் சாா்பில், சுகாதாரமான உணவை உட்கொள்வதற்கான இயக்கத்தின் விழிப்புணா்வுப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பங்கேற்றாா். விழிப்புணா்வு கையேடு ஆகியவற்றை அவா் வெளியிட்டாா். இந்த இயக்கத்துக்காக நாடு முழுவதும் தோ்வு செய்யப்பட்டுள்ள 150 மாவட்டங்களில் புதுக்கோட்டை இருப்பதால் தொடா் பிராசாரப் பணிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில், ஆட்சியா் பி . உமா மகேஸ்வரி தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com