புதுகை மேலும் 11 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th December 2020 05:28 AM | Last Updated : 30th December 2020 05:28 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,394 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தோரில் 11 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,188 ஆக உயா்ந்துள்ளது.
புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 155 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருபவா்களின் எண்ணிக்கை 51 ஆகக் குறைந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...