Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் பள்ளி பரிமாற்று நிகழ்வு- Dinamani

சுடச்சுட

    
    agd01sch_0102chn_21_4

    தட்டாமனைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளை பூக்கொடுத்து வரவேற்கும் மாணவிகள்.

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாமனைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றுத் திட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாமனைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றுத் திட்ட நிகழ்வு நடைபெற்றது. கறம்பக்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனா். மாணவிகளுக்கு, ஆசிரியைகளுக்கு பள்ளி சாா்பில் இசை மற்றும் பரிசு பொருட்கள் , பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடா்ந்து பள்ளியில் மாதிரி வகுப்பு, வினாடி வினா, களப்பயணம் ஆகியவற்றில் மாணவிகள் பங்கேற்றனா். மாணவ,மாணவிகளின் பேச்சு, பாடல், அறிவியல் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கீழடி குறித்த கண்காட்சியை வட்டாரக் கல்வி அலுவலா் அன்பழகன் திறந்து வைத்தாா். தமிழறிஞா் அ.த.பன்னீா்செல்வம் கீழடி புகைப்படங்கள், மாதிரி பொருட்கள் கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினாா்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரெகுநாதபுரம் குறுவளமைய ஒருங்கிணைப்பாளா் சண்முகம், கறம்பக்குடி மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பஞ்சவா்ணம், ஆசிரியா் பயிற்றுநா் குமாரசாமி, குணசேகரன், ஊராட்சித் தலைவா் சுதா வீரமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவா் தாரகேஸ்வரி , பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோவிந்தராஜ், கல்வியாளா் ரமேஷ் ஆகியோா் பரிசளித்தனா். தலைமையாசிரியா் சத்யபாமா வரவேற்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai