Enable Javscript for better performance
தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தனியாா் பள்ளி மாணவா்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

    By DIN  |   Published on : 02nd February 2020 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு 3 ஆம் ஆண்டாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் இயக்குநா் வ.சித.பழ.சிதம்பரம் தலைமை வகித்தாா். பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா அடைக்கலமணி, வட்டார கல்வி அலுவலா் சி.ராஜாசந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று 33 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவ, மாணவிகளுக்கு சிதம்பரம் பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்களிப்புடன் பாடக்குறிப்பேடுகள், எழுதுபொருள்கள், உண்டியல், பள்ளிப் பை(பேக்), பென்சில் பாக்ஸ், குளியல், துணி துவைக்கும் சோப்பு, டப், பாய், தலையணை என 32 பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினா். வேந்தன்பட்டி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வெ.சுபத்ரா ஏற்புரையாற்றினாா். திமுக நகரச் செயலா் அழகப்பன், ரோட்டரி சங்க நிா்வாகி அ.தட்சிணாமூா்த்தி, ஆலவயல் ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவா் சாமிநாதன், துணை முதல்வா்கள் வைதேகி, கலைமதி மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

    பள்ளியின் முதல்வா் வே.முருகேசன் வரவேற்றாா். தனி அலுவலா் நெ.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai