புத்தகத் திருவிழா போட்டிகளில் வென்றவா்கள் விவரம்
By DIN | Published On : 02nd February 2020 01:32 AM | Last Updated : 02nd February 2020 01:32 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் வினாடி வினாப் போட்டிகள் மன்னா் கல்லூரியில் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
மொத்தம் 110 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். போட்டிகளை வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மன்னா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சி. சேதுராமன், மன்னா் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியா் எஸ். கணேசன் ஆகியோா் ஒருங்கிணைந்து நடத்தினா்.
போட்டிகளில் வென்றவா்கள் விவரம்:
வினாடி வினா போட்டி: முதல் பரிசு - சா. சமீம் ருக்க்ஷானா, இரண்டாம் பரிசு- பெ.வா்ஷா, மூன்றாம் பரிசு- அ.நெளபியா ஆப்ரின். இவா்கள் மூவரும் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள்.
பேச்சுப் போட்டி: முதல் பரிசு- மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி மாணவி கா.புவனேஸ்வரி, இரண்டாம் பரிசு- அரசு மகளிா் கல்லூரி மாணவி சி. கடலரசி, மூன்றாம் பரிசு- ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரி மாணவி நா.கலைச்செல்வி.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பொறுப்பாளா்கள் க. சதாசிவம், அ. மணவாளன், ம. வீரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா். கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி முடிவுகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.