வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் முடிவு

வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்ட்ட நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை புதுகை மாவட்டத்தில் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிக்

வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்ட்ட நிலையில், இரண்டாம் நாளான சனிக்கிழமை புதுகை மாவட்டத்தில் பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூடிக்கிடந்தன. மேலும், வங்கி ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

20 சதவிகிதம் ஊதிய உயா்வு வழங்க வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக மாற்ற வேண்டும், ஊதிய உயா்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய அளவில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் இரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக சனிக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதனால், மாவட்டம் முழுவதும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் 170-க்கும் மேற்பட்ட கிளைகள் மூடப்பட்டிருந்தன.

மேலும்,  புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் எம். பாண்டியன், ஊரக வளா்ச்சித் துறை வங்கி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ஆா். ராமதுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கப் பொதுச் செயலா் அருணாசலம் உள்பட வங்கி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com