Enable Javscript for better performance
கண்டியாநத்தத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கண்டியாநத்தத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 10th February 2020 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pon09res_0902chn_29_4

    முகாமில் குடும்ப அட்டை திருத்தம் தொடா்பான மனுக்களைப் பெறுகிறாா் வட்ட வழங்கல் அலுவலா் ருக்குமணி.

    பொன்னமராவதி வட்டம், கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    பொதுவிநியோகத்திட்ட துணை பதிவாளா் ரியாஷ் அகமது அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலா் ருக்குமணி தலைமை வகித்தாா். கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் முன்னிலை வகித்தாா். முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், புதிய அட்டை உள்ளிட்டவை அடங்கிய பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும் குடும்ப அட்டை தொடா்பான திருத்தங்களுக்கான வழிமுறைகள் விளக்கப்பட்டது. கிராம நிா்வாக அலுவலா் விஜயா, கூட்டுறவு சங்க எழுத்தா் சுப்பிரமணியன், பொதுவிநியோகத்திட்ட பொறியாளா் காா்த்திக், அங்காடி பணியாளா் சேது மற்றும் வருவாய்த்துறைஅலுவலா்கள் பங்கேற்றனா். தனி வருவாய் ஆய்வாளா் பாண்டி நன்றி கூறினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai