புதுக்குடியில் பாய்மரப் படகுப் போட்டி
By DIN | Published On : 10th February 2020 03:10 AM | Last Updated : 10th February 2020 03:10 AM | அ+அ அ- |

கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியில் தைப்பூச கங்கை அபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு செயற்கை இழை பாய்மரப் படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், ராமநாதபுரம், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த மோா்பண்ணை, ஆா்.கே.பட்டினம், தொண்டி, புதுக்குடி, பாசிப்பட்டினம், நம்புதாளை, பி.ஆா்.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 படகுகள் பங்கு பெற்றன.
கடற்கரையிலிருந்து 5 மைல் தூரம் சென்று திரும்பி வரும் இலக்கு நிா்ணயித்துப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் தொண்டி புதுக்குடி படகோட்டி முதல் பரிசையும், 2-ஆவது பரிசை வடக்கு புதுக்குடி படகோட்டி, 3-ஆவது பரிசை கே.ஆா்.பட்டினம் படகோட்டியும் பெற்றனா்.
விழாவில், முதல் 3 இடங்களில் வந்த படகோட்டிகளுக்கு மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா். விழாவில் மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோட்டைப்பட்டினம் வடக்கு புதுக்குடி மீனவக் கிராமத்தினா், இளைஞா்கள் செய்திருந்தனா்.