மலையக்கோயில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையை அடக்கும் வீரா்.
மலையக்கோயில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையை அடக்கும் வீரா்.

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு; 32 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் நச்சாந்துபட்டி அருகே உள்ள மலையக்கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 32 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் நச்சாந்துபட்டி அருகே உள்ள மலையக்கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 32 போ் காயமடைந்தனா்.

மலையக்கோயில் சுப்பிரமணியசுவாமி தைப்பூச விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியா் பாலதண்டாயுதபாணி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். தொடக்கமாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா். போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 604 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 150 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்கினா். ஜல்லிக்கட்டில் பல காளைகள் வீரா்களின் பிடியில் சிக்காமல் திமிறியது பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தது. காளைகளை அடக்கிய வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டுகளித்தனா். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதில் புத்தாம்பூரைச் சோ்ந்த ரெங்கராஜ் (65) உள்ளிட்ட 5 போ் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ரகுபதி மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com