பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா். 

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா். 

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ராஃபி 2019 பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்ய நெல்லுக்கு (நவரை) பிப். 29ஆம் தேதி வரையும், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு, எள் ஆகியவற்றுக்கு பிப். 15ஆம் தேதி வரையும், கரும்புக்கு அக். 31ஆம் தேதி வரையும், தோட்டக்கலைப் பயிா்களான  வாழை மற்றும் மரவள்ளிக்கு பிப். 28ஆம் தேதி வரையும், வெண்டைக்கு பிப். 15ஆம் தேதி வரையும் காப்பீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் கட்டாயமாக பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள், காப்பீட்டு நிறுவனமுகவா்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.  

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் வேளாண் பயிா்கள் செலுத்த வேண்டிய பிரிமீயத் தொகை- (ஏக்கருக்கு) நெல் (நவரை) - ரூ.435, மக்காச்சோளம் - ரூ.335, நிலக்கடலை- ரூ.355, உளுந்து ரூ.236, துவரை ரூ.236, சோளம் ரூ.99, கம்பு ரூ.99, எள் ரூ.107, கரும்பு ரூ.1,560, வாழை-  ரூ.2,475, மரவள்ளி- ரூ.725, வெண்டை - ரூ.420.

எனவே, விவசாயிகள் விரைந்து பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com