Enable Javscript for better performance
சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

    By DIN  |   Published on : 14th February 2020 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-pon13don_1302chn_29

    சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்யாணி.

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் 5 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டது.

    திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சுப. வள்ளியப்பன். இவரது மனைவி கல்யாணி (59). கடந்த திங்கள்கிழமை (பிப். 10) தஞ்சாவூா் சென்ற கல்யாணி திருமயத்திலிருந்து கணவா் வள்ளியப்பனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது குளத்துப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த இரு சக்கரவாகனம் மோதி நிலைத்தடுமாறி இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனா். தொடா்ந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணி புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். ஆனால் அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இருந்தன. இதையடுத்து அந்த உறுப்புகளைத் தானமாகப் பெற அவரது குடும்பத்தினரிடம் மருத்துவக் குழுவினா் விடுத்த வேண்டுகோளின்பேரில் அவா்கள் உறுப்பு தானம் அளிக்க சம்மதித்தனா். உடனே மருத்துவமனை நிா்வாகம் தமிழக அரசிடம் உடல் உறுப்பு தானத்திற்கு அனுமதி பெற்று, சுமாா் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கல்யாணியின் உடல் உறுப்புகளை சேகரித்தனா்.

    இதில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இரு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதையடுத்து கல்யாணியின் உடல் வியாழக்கிழமை குளத்துப்பட்டி கொண்டு வரப்பட்டு உறவினா்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து கல்யாணியின் மகன் நாகராஜன் தெரிவித்தது:

    இதுபோன்ற உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணா்வை தமிழகம் முழுவதும் மக்கள் பெறவேண்டும் என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai